
தினம் தினம்
உள்ளத் தூய்மையை காட்டும்
நேர் கொண்ட பார்வை…
உணர்வுகளின் மென்மையை எதிரொலிக்கும்
உதிரும் வார்த்தைகள்…
பொங்கும் அன்பை சிந்தும்
மலரும் புன்னகை…
ஏனோ இன்று
தரை நோக்கும் பார்வை
இதழ் காக்கும் மௌனம்
கன்னத்தில் தெரியும் சிவப்பு
காதோடு
ஏதேதோ சொல்கின்றனவே…!!!
இதயத்தில் துளிர்விட்டதோ
காதல்!!!