
“கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார், நீ அதை வென்றுவிடலாம்.”
*****
“மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.”
*****
“எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர்த் துளிகள் போல, அவனை விட்டு அகலும்.”
*****
“உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு.
அறிவு உணர்ச்சியை வெல்வதுதான் உயர்வு.”
*****
“எந்த உறவாக இருந்தாலும் அதில் நீ உண்மையான பாசம் வைத்தால் மட்டுமே நீ விலகி நின்றாலும் அது உன்னைத் தேடி வரும்.”
*****
“எல்லாம் நன்மைக்கே” என்ற கூற்றில் நமக்கு வரும் துன்பத்தினால் என்ன நன்மை “?
நாலு பெரிய நன்மை இருக்கு…
உங்க துன்பத்தில் உதவுரவங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாம்.
அந்த துன்பத்தில யாரு உங்களை கைவிட்டவங்கன்னு புரிஞ்சிக்கலாம்.
அடுத்து, யாரால அந்த துன்பம் உங்களுக்கு உண்டாச்சுன்னு தெரிஞ்சு அடுத்து உஷாரா இருக்கலாம்.
அதோட, உங்களுக்கு வேண்டப் பட்டவங்களுக்கு உங்களோட இந்த அனுபவத்தை விளக்கி, அவங்களுக்கு அது வராம காப்பாத்தலாம்…
இப்படி பல வகைல பலன் இருக்கு..”
*****
“உயிர் காக்கும் தந்திரம்!
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.”
*****
“கவனிக்க ஏழு…
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை”
*****