சீதனம் வேண்டாம்
சீதனம்
வேண்டாம் என்றேன்…
உன் குரல் கேட்கும் போதெல்லாம்
என் விழிகள் அலைபாயுதே
சுற்றிச் சுற்றிப் பார்க்குதே
உன் முகத்தை தேடுதே
உள்ளம் வாடிப் போகுதே
விழிகள் நீரில் மிதக்குதே
சட்டென்று முன்னே தோன்றி
ஏக்கம் தீர்க்க மாட்டாயா…
கஷ்டப்படுபவர்களுக்கு
செய்யும் உதவி
விழலுக்கு இறைத்த நீரென்று
ஒருபோதும் நினைக்காதே…
இடியால் இடித்தும்
மின்னலால் வெட்டியும்
கண்ணீர் சிந்தாமல்
இருக்கிறாயே…
விடியும் பொழுதினிலே
காலை வணக்கம் கூறி
இனிதாக துயில் எழுப்பும்
புள்ளினங்களே நன்றி
ஈரைந்து மாதங்கள்
ஈருயிர் ஓருடலாய்
ஈன்றெடுத்த பொழுதினிலே
ஈரம் என் விழிகளிலே
என்னுள்ளே உயிர்த்து
மடியினிலே உறங்கி
தோள்களிலே ஏறி
மயக்கினாய் கண்ணா...
வான் வீதி
வெறிச்சோடி இருக்கிறது
இன்று
ஊரடங்கு சட்டமாம்
கரு முகில்கள்
கூறிச் செல்கின்றன…
பட்டப்பகலில்
இருவரும் ஒரு குடையில்
அணைத்தபடி நெருக்கமாக…