யுத்தம்
வான் வீதி
வெறிச்சோடி இருக்கிறது
இன்று
ஊரடங்கு சட்டமாம்
கரு முகில்கள்
கூறிச் செல்கின்றன…
வான் வீதி
வெறிச்சோடி இருக்கிறது
இன்று
ஊரடங்கு சட்டமாம்
கரு முகில்கள்
கூறிச் செல்கின்றன…
பட்டப்பகலில்
இருவரும் ஒரு குடையில்
அணைத்தபடி நெருக்கமாக…
சமுதாயம் சீரழிகிறது
ஏன் இன்னும் அமைதியாக இருக்கின்றாய்
உன்னைச் சுற்றியிருப்பவர்களை பார்…
உன் புன்னகையால்
மின்னலென
பறித்துவிட்டாயே என் விழிகளை …
அன்றைய தலைவனை
திட்டினார்கள் தூற்றினார்கள்
வசை பாடினார்கள்…
இன்றைய தலைவன்
அவனை
நல்லவனாக்கிவிட்டான்
கணவனின் குறிப்பறிந்து நடப்பவள்
அவளே தாய்
பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பவள்
அவளே தாய்