கனவுகளில்
மிதந்த விழிகள்
இன்று
நீரிலே தத்தளிக்கின்றன…!!!
Standard
October 18, 2021 by Gowry Mohanபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே!
புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்களே, ஒன்றை நீங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் எப்படி பயந்து கொண்டு புகுந்த வீட்டிற்குச் செல்கிறீர்களோ, அதே மனநிலையில்தான் அவர்களும் உங்களை எதிர்கொள்கிறார்கள். தங்கள் பயத்தை வெளிக்காட்டமாட்டார்கள். மாறாக உங்கள் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக ஆராய்ச்சி செய்வார்கள். எனவே அவர்களின் சந்தேகத்தைப் நீக்கி, அவர்களின் மனதை வெற்றிகொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
Continue reading →Standard
October 18, 2021 by Gowry Mohanபிறவிப் பயன் அடைவோம்
கடவுள் தந்த வரம் இது
கிடைத்தற்கரிய பிறவி இது
கடமைகளை செய்திடுவோம்
கண்ணியமாய் இருந்திடுவோம்
Standard
October 4, 2021 by Gowry Mohanஇன்றைய சமுதாய அவலங்களுக்குக் காரணம் தனி மனிதனா? அல்லது சமூகமா?
தனி மனிதர்கள் சேர்ந்த தொகுதியே சமுதாயம்.
ஒரு தனி மனிதனின் தீய நவடிக்கை அவனது குடும்பத்தைப் பாதிக்கின்றது.
அவனைச் சுற்றி இருப்பவர்களை அவனது வழிக்கு இழுக்கின்றது.
இதனால் ஒரு குழு உருவாகி சீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.
இது சமுதாயத்தையே பாதிக்கின்றது அன்றி இந்த அவலங்களுக்கு காரணம் சமுதாயம் அல்ல.
Standard
October 4, 2021 by Gowry Mohanவாராய் கண்ணா
தனியாக விட்டதென்ன
நியாயம் கண்ணா…
பிரிந்தது போதும் தவித்தது போதும்
துயரம் துடைப்பதற்கு
விரைந்து வா கண்ணா…
Standard
October 4, 2021 by Gowry Mohanபறிபோனது இதயம்
சொரிந்தன மலர்கள்
ஒரு கணம்
உன் பார்வை
என்மீது நிலைத்தபோது…
Standard
October 4, 2021 by Gowry Mohanசொல்ல வந்த காதல்
எழுத்துக்கள் சேர்த்து சொற்களைத் தேடி
சொற்களைக் கோர்த்து வார்த்தைகளாக்கி
காத்திருந்தேன் சொல்வதற்கு…
Standard
October 4, 2021 by Gowry Mohanகாற்றே!
இறைவனுக்கு நிகரானவன்
எங்கும் நிறைந்திருப்பவன்
தடுப்பார் யாருமில்லை
பார்க்கிறாய் கேட்கிறாய்
வரவில்லையா சீற்றம் …
Standard
September 29, 2021 by Gowry Mohanகுடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவதில் சிறந்த பங்கு யாருக்கு? குடும்பத் தலைவருக்கா? தலைவிக்கா?
குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதற்கும் அக்குடும்பம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கும் கணவன், மனைவியிடம் இருக்கவேண்டியவை;
Continue reading →Standard
September 29, 2021 by Gowry Mohanநெருங்க முடியாது
காதல் சொல்ல
தென்றலை தூது விட்டேன்
புயலாகத் திரும்பியது
நிலாவை அனுப்பினேன்
காணாமல் போனது
என்னதான் நடக்கிறது…!!!