தொன்மையான மொழியாம்
வீரமான
மொழியாம்
அன்பைப்
பொழியும் மொழியாம்
அறிவைக் கொண்ட
மொழியாம்
இனிமை கொஞ்சும்
மொழியாம்
பெருமை மிக்க
மொழியாம்
கலை பண்பாடு
கலாச்சாரம்
மூன்றிலுமே
உச்சம் தொட்டு
கட்டுக்கோப்பாய்
வாழ வைத்து
மிளிர்கின்ற
மொழியாம்
தமிழ்…
Standard
April 13, 2020 by Gowry Mohanதிருப்புமுனை
வழமைபோல் கீர்த்தனா அலுவலகத்தில் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருந்தாள்.
“கீர்த்தி! நானும் பார்த்துக்கொணடுதான் இருக்கிறேன் தினமும் நீ குழந்தையை கிணத்துக் கட்டில வைத்துவிட்டு வந்தமாதிரி பரபரப்பா இருக்கிறாய்….
உனக்கென்னம்மா குறை. கண்ணிறைந்த கணவன், அருமையான மாமனார் மாமியார், அழகான குழந்தை…”