வசந்தம்
சூழ்ந்திருந்த சுமைகள்
முள்வேலியாய்…
வாழ்க்கையோ
இயந்திரமாய்…
சூழ்ந்திருந்த சுமைகள்
முள்வேலியாய்…
வாழ்க்கையோ
இயந்திரமாய்…
எதையும் தாங்கும் உள்ளம்
ஆனால்
தாங்க மறுக்கிறது
உனது பிரிவை…
விழிகளை நிறைத்த அவள்
நிறைத்துவிட்டாள்
உள்ளத்தை…
எண்ணங்களை சிறைப்பிடித்து
சுழழ விட்டாள்
தன்னைச்சுற்றி…
கனவுகளில்
தித்திப்பு தரும்
பெண்ணே!
நிஜத்தில்
கசப்பை தருகிறாயே…
அன்னையின் அன்பில் குளித்து
தந்தையின் பாசத்தோடு வளர்ந்து
வெளியுலகப் பிரவேசம்
நல்வழி காட்டுமா…
ராஜாத்தி என் கண்மணியே!
அம்மா சொல்வதைக் கேளம்மா
எங்கள் வீட்டு லக்ஷ்மியே!
நல்லதைத்தான் சொல்வேன் கண்ணே!
உதிரத்தை உணவாய் தந்தாய்
உலகத்தை பரிசாய் தந்தாய்
வாழும் கலையை கற்றுத் தந்தாய்
துணையாய் இருந்து துணிவைத் தந்தாய்