அயராது விழித்து
கற்றிடுவேன்
ஓயாது உழைத்து
முன்னேறிடுவேன்
துணையாக உந்தன் காதலிருந்தால்…
Standard
August 26, 2022 by Gowry Mohanபெற்றோர் கடமை
பிறக்கும் குழந்தைகள்
உள்ளம் தூய்மை…
அதை பேணிக்காப்பது
பெற்றோர் கடமை…
Standard
August 26, 2022 by Gowry Mohanசிறையில் காதல்
எனக்காகவே படைத்தானோ
பிரம்மன் உன்னை…
உன்னுள்ளே ஒளித்து வைத்தானோ
எந்தன் காதலை…
Standard
August 26, 2022 by Gowry Mohanவிடுதலை
என் விழிகள் என் வசமில்லை…
விலக மறுத்து
தொடர்கின்றன உன்னையே…
Standard
August 23, 2022 by Gowry Mohanமாற்றம்
கள்வனே!
கன்னம் வைத்து புகுந்துவிட்டாய்
யாரும் அறியாமலே…
போராடி கொன்றுவிட்டாய்
தனிமையை
துணையாக விட்டுச் சென்றாய்
இனிமையை…
உணர்வுகள்
உன்னை ஏற்றுக்கொள்ள
கள்ளியாக்கிவிட்டாய்
என்னையும்!!!
Standard
August 23, 2022 by Gowry Mohanபுதிய பயணம் தொடங்கிடு
உள்ளத்தை சுற்றி
ஆயிரம் தளைகள்…
தகர்த்துவிட்டாய்
அனைத்தையும்…
கைப்பற்றிவிட்டாய்
ஆட்சியை…
Standard
August 23, 2022 by Gowry Mohanஊடல்
கவலையின்றி நிர்மலமாய்
ஓடி விளையாடும் மேகங்கள்
கவலைகொண்டு கட்டியணைத்து
முகம் கறுத்திருப்பது ஏனோ…!!!
Standard
August 19, 2022 by Gowry Mohanநீயே
Standard
August 19, 2022 by Gowry Mohanமலருதடி உள்ளம்
மலர்களை பார்க்கும்போதெல்லாம்
அங்கு
உன் முகம் தெரியுதடி…
Standard
August 19, 2022 by Gowry Mohanமலர்ந்த காதல்
மலர்களில் துயின்ற நறுமணத்தை
கடத்திச் சென்றது
காற்று
அதை பரப்பிச் சென்றது
தென்றல்…