Author Archive
June 23, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 191
“பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த ரத்தன் டாடாவின் கடைசி வார்த்தைகள்… இந்த வாழ்க்கையில் உங்கள் உண்மையான துணை உங்கள் உடலே! உங்கள் உடல் உங்களுடன் ஒத்துழைக்காத நாளில், உங்களிடம் எத்தனை கோடிகள் இருந்தாலும், எத்தனை மருத்துவர்கள் இருந்தாலும், மக்களுக்கு உதவுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
June 23, 2026 by Gowry Mohan
புத்தகங்கள்
புத்தகங்களை அறிவியலின் திறவுகோல், சிறந்த வழிகாட்டி, எண்ணங்களின் வெளிப்பாடு, தகவல்களின் பரிமாற்றம், உற்ற தோழன் எனக் கூறிக்கொண்டே போகலாம். இருந்த இடத்திலிருந்து உலகைச் சுற்றி வர புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் ஒரு மனிதனின் அறிவை வளர்ச்சியடையச் செய்கின்றன. மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வல்லன. பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கும் சிறுவர்களை வேண்டாத பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன.
June 17, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 190
“ஒரு விதை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்து கொள்ளுகிறது. அதற்கு நீர் ஊற்றுகிறோம், காத்திருக்கிறோம். அது மெல்ல மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது, கிளைகள் உருவாகின்றன. பூக்கள் பூக்கின்றன. கடைசியில் தான் கனி தருகிறது. இந்த பயணம் மிக நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் மிக பெரியது. பொறுமையுடன் காத்திருப்பது மிக அவசியம். பொறுமை கசப்பானது ஆனால் அது தருகின்ற […]
June 17, 2026 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ4
குவியல் 8 எண்ணம் 4 பாதுகாப்புத்துறை ஒரு நாடு வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு ஒழுக்கம், அமைதி மிகவும் அவசியமாகும். இவற்றைக் காப்பதற்கு பாதுகாப்புத்துறை இயங்குகிறது. இத்துறையில் முப்படையினரும் (தரைப்படை-இராணுவம், கடற்படை, வான்படை) காவற்துறையினரும் கடமையாற்றுகின்றனர். ஆரம்ப காலங்களில் பாதுகாப்புத்துறையில் ஆண்கள் மட்டுமே கடமையாற்றினர். இன்று இத்துறையில் பெண்களின் பங்கு இன்றியமையாதுள்ளது.
June 5, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 189
“நல்லதை செய்பவன் உன்னுடைய எதிரியாக இருந்தாலும்அவனோடு சேர மறுக்காதே கேட்டதை செய்பவன் உன்னுடைய நண்பனாக இருந்தாலும்அவனை விட்டு விலக மறக்காதே” *****
June 5, 2026 by Gowry Mohan
“ஙப்போல் வளை”
சுற்றம் சூழ வாழ்வதே மனிதனுக்கு நிம்மதியான, சந்தோஷமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்கும் என்பது யாவரும் அறிந்ததே. குடும்பத்தில் இன்பங்கள் மட்டுமல்லாமல் துன்பங்களும் துயரங்களும் வந்து போவது இயற்கையே. இன்பம் வரும் வேளையில் கூடி மகிழ்வதும், துன்பம் வரும் வேளையில் ஒருவருக்கொருவர் உதவுவதும் ஆலோசனைகள் வழங்குவதுமே உற்றார் உறவினர் நண்பர்களது கடமையாகும். அவையே வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்திச் செல்ல உதவும் காரணிகள் எனலாம்.
May 25, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 188
“பகிர்வின் மணம் அந்த மாலைப் பொழுது மெல்லிய காற்றுடன் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த முதியவர் தன் வீட்டுத் தோட்டத்தில் குனிந்து செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் தென்பட்ட அமைதி, அந்த இளைஞனை அவரிடம் ஈர்த்தது. அவன் மிகுந்த மன அழுத்தத்துடன் அவரிடம் வந்தான். “ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். இன்று உலகம் முழுக்கப் பேராசையும் சுயநலமுமே பெருகிவிட்டதே! நேர்மையாக இருப்பவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் ஒரு மனிதன் எப்படி நன்னம்பிக்கையோடு வாழ்வது? எங்கு பார்த்தாலும் எதிர்மறையான […]
May 25, 2026 by Gowry Mohan
விடுமுறை நாளொன்று…
இந்த விடுமுறைக்கு நாங்கள் சிகிரியா குன்றுக்கு (இலங்கை) சென்றோம். அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காரில் பயணத்தை தொடங்கினோம். காலை 7 மணியளவில் சிகிரியாவை சென்றடைந்தோம்.
May 5, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 187
“மீண்டெழுந்த வீரம்” அந்தக் கார் இருள் சூழ்ந்த குகைக்குள் விக்கிரமனின் பெருமூச்சு மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் “வாழ்க!” என முழக்கமிட, மத்தளங்கள் அதிர யானை மீது பவனி வந்த குறுநில மன்னன் அவன். ஆனால் இன்று, தன் வாள் உடைந்த நிலையில், உடல் எங்கும் காயங்களோடு, ஒரு அகதியாகக் குகையில் அமர்ந்திருந்தான். எதிரி நாட்டுப் படைகள் அவன் கோட்டையைத் தகர்த்து, அவன் குடிமக்களை அடிமைப்படுத்தி, அவன் மானத்தைச் சிதைத்துவிட்டன.
May 5, 2026 by Gowry Mohan